துப்பாக்கிமுனையில் நிற்க வைக்கும் வரை அப்படி செய்ய மாட்டேன்: எலான் மஸ்க்
உக்ரைனில் ஸ்டார்லிங் இணைய சேவையை முடக்க அதிக வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் எச்சரித்திருந்தார்.
ரஷிய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனத்திடம் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆனால், துப்பாக்கிமுனையில் நிறுத்தி அப்படி செய்ய சொல்லும் வரை முடக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், "ஸ்டார்லிங்கிடம் சில அரசுகள் (உக்ரைன் அல்ல) ரஷ்ய செய்தி நிறுவனங்களை முடக்குமாறு கூறியுள்ளது. துப்பாக்கி முனையில் நிற்க வைக்கும் வரை அவ்வாறு செய்ய மாட்டோம்.
ஒரு சுதந்திரமான பேச்சுரிமைவாதியாக இருப்பதற்கு மன்னிக்கவும்" என பதிவிட்டுள்ளார்.
சைபர் பாதுகாப்பு, சிக்னல் முடக்கத்தை தாண்டி இணைய சேவை வழங்குவது உள்ளிட்டவற்றுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துவருகிறோம் என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஸ்டார்ஷிப், ஸ்டார்லிங்க் வி2 ஆகியவற்றில் இந்த அம்சங்கள் வருவதற்கு தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்திய மாணவர்களை உக்ரைனிலிருந்து வெளியேற்ற தயார்: ரஷியா அறிவிப்பு
உக்ரைனில் ஸ்டார்லிங் இணைய சேவை மட்டுமே வழங்கப்பட்டுவரும் நிலையில், அதை முடக்க அதிக வாய்ப்புள்ளது என எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.