உலகம்

உலகளவில் கரோனாவால் 44.34 கோடி பேர் பாதிப்பு

DIN

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலக அளவில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 44.34 கோடியைக் கடந்ததாக தினசரி தொற்று அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 7,92,50,505-ஆகவும் பலி எண்ணிக்‍கை 9,58,142 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,29,51,556 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,14,589 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும், உலகளவில் 1056 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT