FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தென்கொரியா அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ: தேசிய பேரிடர் பகுதியாக அறிவிப்பு!

தென்கொரியாவில் அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 2:05 pm IST
பகிர்:

தென்கொரியாவில் அணுமின் நிலையம் அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் உல்ஜின் பகுதியில் அந்நாட்டுக்குச் சொந்தமான அணுமின் நிலையம் உள்ளது. கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள இந்த அணுமின் நிலையம் அருகே நேற்று(வெள்ளிக்கிழமை) பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தப் பகுதியை தேசிய பேரிடர் பகுதியாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

காட்டுத்தீயில் இருந்து அணுமின் நிலையத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் முடுக்கி விட்டுள்ளார். 

காட்டுத் தீ பரவியதால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். பலத்த காற்றுக்கு மத்தியில், சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments