தென்கொரியாவில் காட்டுத்தீ: மீட்புப் பணியில் 2000 வீரர்கள் 
உலகம்

தென்கொரியாவில் காட்டுத்தீ: மீட்புப் பணியில் 2000 வீரர்கள்

தென்கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

தென்கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்கொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான உல்ஜினில் வெள்ளிக்கிழமை காலை திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. மலைப்பகுதியில் ஏற்பட்ட இந்தக் காட்டுத்தீயானது இதுவரை 3000 ஹெக்டேருக்கு மேல் பரவி நாசம் செய்துள்ளது.
இந்நிலையில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ பாதிப்பால் உல்ஜினியில் உள்ள 90க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இதன்காரணமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

காட்டுத்தீ பாதிப்பால் ஏற்பட்ட இறப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. 

தொடர்ந்து காட்டுத்தீ பரவல் அதிகரித்து வருவதால் ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரை இறைச்சி தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சாம்சியோக்கில் உள்ள திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையத்தை காட்டுத்தீ நெருங்கி விடாமல் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT