உலகளவில் கரோனாவால் 45.37 கோடி பேர் பாதிப்பு
உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60,50,420 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60,51,371 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கரோனா தொற்று பரவி அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45.37 கோடியைக் கடந்ததாக தினசரி தொற்று அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,84,261 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5,15,714 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.