உலகம்

புதிய வைரஸை உருவாக்கும் பில் கேட்ஸ்...அமெரிக்காவின் ரகசிய ஆய்வகங்கள்...உக்ரைன் போரை சுற்றும் வதந்திகள்

DIN

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா குறித்து பல பொய் செய்திகள், தகவல்கள் பகிரப்பட்டுவந்தது. தற்போது, உலகின் அனைவரின் கவனத்தையும் உக்ரைன் போர் ஈர்த்துள்ள நிலையில், இதுகுறித்த வதந்திகள் உலா வர தொடங்கியுள்ளன. 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரானை வெற்றிபெற வைப்பதற்காகவே மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த போர் நடத்தப்பட்டுவருவதாக வதந்தி பரவிவருகிறது.

குழந்தைகள் மீது பாலியல் ரீதியான தாக்குதல்களை நடத்தும் கும்பலின் சர்வதேச வலைப்பின்னலின் அடித்தளமாக உக்ரைன் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். புதிய உலக ஒழுங்கை ஏற்படுத்துவதற்காக புது விதமான கரோனா வைரஸை உக்ரைனில் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆய்வகத்தில் வைத்து உருவாக்கிவருகின்றனர் என்றும் பொய் தகவல் ஒன்று பரவிவருகின்றது.

பிரான்ஸை சேர்ந்த சில்வானோ ட்ரோட்டா, அமெரிக்காவின் ஷெர்ரி டென்பென்னி, ஆஸ்திரேலியாவின் சிமியோன் போய்கோவ் உள்ளிட்டோர் பொய் செய்திகளை பரப்புவோரில் மிக பிரபலம். இவர்கள் உள்பட சதி திட்டம் இருப்பதாக கூறும் நபர்களின் சமூக வலைதள பக்கங்களில் மாற்றம் ஒன்று தெளிவாக தெரிகிறது. அதாவது, கரோனாவிலிருந்து தற்போது உக்ரைன் போர் குறித்து இவர்கள் பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். 

உலகின் கவனம் எதன் மேல் இருக்கிறதோ அதுகுறித்து பொய் தகவல்களை பகிர்ந்து இடையூறு விளைவிக்கவே சிலர் இம்மாதிரியான பொய் தகவல்களை பகிர்ந்துவருகின்றனர் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, இம்மாதிரியான வதந்திகளை பரப்புவோரை சந்தர்ப்பவாதிகள் என நிபுணர்கள் விமரிசித்துள்ளனர். 

பொய் செய்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுவரும் பிரான்ஸ் நாட்டின் நிபுணர் டிரிஸ்டன் மென்டிஸ் இதுகுறித்து கூறுகையில், "கரோனா குறித்து பொய் தகவல்களை பகிர்ந்தவர்களே தற்போது உக்ரைன் போர் குறித்து வதந்திகளை பரப்பிவருகின்றனர். இது ஆச்சரியம் அளிக்கவில்லை. உலகின் கவனம் எதன் மேல் இருக்கிறதோ அதுகுறித்தே இவர்களின் அடிப்படை ஆதாரமற்ற பொய் செய்திகளை பரப்புவர்" என்றார்.

தலைப்பு மாறியிருக்கலாம் ஆனால் இவர்களின் இலக்குகள் மாறவே இல்லை. உலக பணக்காரர்களான பில் கேட்ஸ், ஜார்ஜ் சோரோஸ் ஆகியோர் குறித்து பொய் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் பொய் தகவல்கள் என்பதை ஏஃஎப்பி செய்தி நிறுவனம் தகுந்த ஆதாரங்களுடன் நிருபித்துள்ளது.

பில் கேட்ஸ், ஜார்ஜ் சோரோஸ் ஆகியோர்தான் பெருந்தொற்றை திட்டமிட்டு பரப்பியதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டன. உக்ரைனில் உயிரியல் ஆயுத தொழிற்சாலைகளை அமைக்க நிதியுதவி அளித்ததே இவர்கள் என்றும் கூறப்படுகிறது. புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கிவருவதால் அதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே உக்ரைன் போரை பில் கேட்ஸ் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் திட்டமிட்டு நடத்திவருவதாக தகவல் ஒன்ற உலா வருகிறது. 

இந்த திட்டத்தை தடுக்கவே ரஷியா தலையிட்டதாகவும் சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT