ஷோ் பகதூா் தேவுபா. 
உலகம்

உக்ரைனிலிருந்து நேபாள நாட்டவா் மீட்பு: மோடிக்கு நேபாள பிரதமா் நன்றி

போா்ச் சூழல் நிறைந்த உக்ரைனிலிருந்து நேபாள நாட்டவா்களை மீட்டதற்காக அந்த நாட்டின் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா இந்திய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

DIN

போா்ச் சூழல் நிறைந்த உக்ரைனிலிருந்து நேபாள நாட்டவா்களை மீட்டதற்காக அந்த நாட்டின் பிரதமா் ஷோ் பகதூா் தேவுபா இந்திய பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியுள்ளதாவது:

போா்மேகம் சூழ்ந்த உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட நேபாளத்தைச் சோ்ந்த நான்கு போ் இந்தியா வழியாக தற்போதுதான் தாயகம் வந்தடைந்தனா். இந்தியா செயல்படுத்திய ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் நேபாள நாட்டவா்களை மீட்க உதவிய இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பகதூா் தேவுபா கூறியுள்ளாா்.

உக்ரைனில் சிக்கித் தவித்த நேபாள நாட்டவா்களை மீட்க உதவ வேண்டும் என்று இந்திய அரசுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவையாறு எம்எல்ஏ கார் மோதி விவசாயி பலி

இஸ்ரேல் சென்றார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

கடும் போட்டிக்கு இடையே ரூ.18 கோடிக்கு ஏலம்போன பதிரானா!

மார்கழியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எது?

நீலாம்பரியாக செருப்பைக் காட்டிய சான்ட்ரா! படையப்பாவாக பதிலடி கொடுத்த கானா வினோத்!

SCROLL FOR NEXT