முகப்பு
உலகம்

சவூதி: ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் 81 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:41 AM
கோப்புப் படம்
பகிர்:

சவூதி அரேபியாவில் 81 பேருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது, அங்கு ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை நிறைவேற்றங்களாகும். இதற்கு முன்னா் கடந்த 1980-இல் நடத்தப்பட்ட 63 பேரது மரண தண்டனை நிறைவேற்றங்கள்தான் அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

இதுகுறித்து அரசு செய்தி நிறுவனம் கூறுகையில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை படுகொலை செய்தவா்கள், பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், அவா்களுக்கு உரிய சட்ட உரிமைகள் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தது.

சவூதியில் மரண தண்டனைகள் பெரும்பாலும் தலையை வெட்டியே நிறைவேற்றப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.