முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான்: விளையாட்டு பொருள் வெடித்து 7 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தின் வீட்டில் குழந்தைகள் விளையாடும்

Updated On : 12 மார்ச், 2022 at 4:51 PM
கோப்புப்படம்
பகிர்:

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தின் வீட்டில் குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்ததனர்.

இந்த விபத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் உள்பட ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்த குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒரு குழந்தை பலத்த காயம் அடைந்துள்ளது. தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதேபோன்று ஆப்கானிஸ்தானின் ஃபரியாப் மாகாணத்தின் தலைநகரான மைமானாவில் குழந்தைகள் விளையாடும் பொருள் வெடித்ததில் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.