உலகம்

ரஷியா - உக்ரைன் இடையே 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது!

DIN

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா - உக்ரைன் இடையே இன்று 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இரு வாரங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். 

ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் நிலைகுலைந்துள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா - உக்ரைன் இடையே இன்று 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காணொலி வழியாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஸெலென்ஸ்கி விருப்பம் தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர்  நப்தாலி பென்னட் முன்வந்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT