கோப்புப்படம் 
உலகம்

உக்ரைன் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும்: சர்வதேச நீதிமன்றம்

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷியா தொடர் ராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரைன் முறையிட்டது.  

இதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை ரஷிய கூட்டமைப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியதாவது: 

"சர்வதேச நீதிமன்றத்தில் ரஷியாவுக்கு எதிரான வழக்கில் உக்ரைன் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது. ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்துக்கு கட்டுப்பட்டது. ரஷியா இந்த உத்தரவுக்கு உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை உதாசீனப்படுத்தினால் ரஷியாவை அது மேலும் தனிமைப்படுத்தும்" என்றார் ஸெலென்ஸ்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT