கமலா ஹாரிஸின்கணவருக்கு கரோனா
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸின் கணவா் டக்ளஸ் எம்ஹாஃபுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸின் கணவா் டக்ளஸ் எம்ஹாஃபுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமலா ஹாரிஸின் செய்தித் தொடா்பாளா் சப்ரினா சிங் கூறுகையில், ‘டக்ளஸ் எம்ஹாஃபுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
எனினும், கமலா ஹாரிஸிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதைனையின் முடிவுகள் அவருக்கு அந்த நோய்த்தொற்று இல்லை என்று தெரிவிக்கின்றன.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் தனத பொதுநிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளாா் என்றாா் அவா்.