தென் கொரியாவை அச்சுறுத்தும் கரோனா: ஒரேநாளில் 6 லட்சம் பேர் பாதிப்பு
தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது,
நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது. ஒருநாள் பாதிப்பாக 6,21,328 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஒரு நாளில் 429 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து இறப்பு எண்ணிக்கை 11,481 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 0.14 சதவீதமாகும்.
தொற்றுநோயால் சிறு வணிகங்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் இருந்தபோதிலும் இயல்புநிலையை மீட்டெடுக்கவும், வைரஸ் கட்டுப்பாடுகளை எளிதாக்கவும் தென்கொரியா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
மேலும், நாட்டில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.44 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது மக்கள்தொகையில் 86.6 சதவீதம் ஆகும்.