முகப்பு
உலகம்

ரஷியப் படையினரால் கடத்தப்பட்ட உக்ரைன் மேயர் விடுவிப்பு

ரஷிய ராணுவத்தினரால் கடத்தப்பட்ட உக்ரைன் மெலிடோபோல் நகர மேயர் விடுவிக்கப்பட்டார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோ
பகிர்:

ரஷிய ராணுவத்தினரால் கடத்தப்பட்ட உக்ரைன் மெலிடோபோல் நகர மேயர் விடுவிக்கப்பட்டார்.

உக்ரைனில் தொடர்ந்து 23-வது நாளாக ரஷியப் படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தலைநகர் கீவை முழுமையாகக் கைப்பற்ற ரஷியத் தரைப்படைகள் முயன்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை உக்ரைனின் மெலிடோபோல் நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் கடத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்துப் பேசிய அதிபர் ஸெலென்ஸ்கி ‘மெலிடோபோல் நகரை ரஷிய கைப்பற்றும் முயற்சியைத் தடுத்த அந்நகர மேயர் இவான் பெடரோவை ரஷிய ராணுவத்தினர் 10 பேர் கடத்திச் சென்றுள்ளனர். ரஷியா ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைப் போல நடந்துகொள்கிறது’ என கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இதனால், ஆத்திரமடைந்த உக்ரைன் படையினர் இளம் வயது ரஷிய ராணுவத்தினர் 10 பேரைக் கைது செய்தனர். 

இந்நிலையில், பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பிணைக் கைதிகளான  ரஷிய வீரர்களை ரஷிய படையிடம் ஒப்படைத்த பின்னர் மெலிடோபோல் மேயர் இவான் பெடரோவை ரஷியப் படை விடுவித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →