உலகம்

உக்ரைன் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு...ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் திட்டம் 

DIN

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதற்கான நடைமுறையை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்க நோர்வே நோபல் குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், "அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கான நடைமுறையை மார்ச் 31, 2022 வரை நீட்டித்து, அதன் மூலம் அதிபர் ஜெலென்ஸ்கிக்கும் உக்ரைன் மக்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும் என நோபல் குழுவை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு அக்டோபர் 3 தொடங்கி 10 ஆம் தேதி வரை வெளியிடப்படும். 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு 251 தனிநபர்களும் 92 அமைப்புகளும் விண்ணப்பித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT