அர்னால்ட் 
உலகம்

ரஷியா போரை நிறுத்த வேண்டும்: அர்னால்ட்

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திச் சேவை

உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

மேலும், போரை நிறுத்த வேண்டும் என்கிற சர்வதேச நீதிமன்ற ஆணையை ரஷியா நிராகரித்தது.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா மாகாண ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் உக்ரைன் போர் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’ரஷியா தான் முதலில் போரைத் தொடர்ந்தது அதனால் உடனடியாக உக்ரைன் மீதான போரை அவர்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் துப்பாக்கிகளால் சுடுவது எதிரிகளை அல்ல உங்கள் சகோதர, சகோதரிகளைத் தான். உக்ரைன் ராணுவ வீரர்கள் புதிய நாயகர்களாக மாறியிருக்கிறார்கள். ரஷிய வீரர்கள் இதைக் கேட்டால் நான் பேசியது உண்மை என அறிவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT