முகப்பு
உலகம்

நைஜீரியா: 16 பேர் சுட்டுக்கொலை

நைஜீரியாவில் உள்ள சம்பாரா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்16 பேர் பலியாகினர். 

Updated On : 22 மார்ச், 2022 at 10:43 AM
பகிர்:

நைஜீரியாவில் உள்ள சம்பாரா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்16 பேர் பலியாகினர். 

சமீப காலமாக நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள் கடத்தலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று(மார்ச்-21) வடமேற்கு மாகாணமான சம்பாரா மாகாணத்தைச் சேர்ந்த கனர் கியாவா கிராமத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அம்மாகாண அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக, கடந்த  டிசம்பர் மாதம் கிவா பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த  அடையாளம் தெரியாத நபர்கள் 58 பேரை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.