உலகம்

ஹிலாரி கிளிண்டனுக்கு கரோனா

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் (74) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனுக்கு

DIN

அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் (74) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டனுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் தனிமைப்படுத்தலில் உள்ளாா்.

இது தொடா்பாக ஹிலாரி கிளிண்டன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மிகவும் லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவா்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தலில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவா் பில் கிளிண்டனுக்கு கரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது. எனினும், வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை நடக்கும் வரை தனிமைப்படுத்தலில் இருக்க அவா் முடிவு செய்துள்ளாா்.

உரிய வழிகாட்டுதல்களின்படி கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதால் எனக்கு தொற்றின் பாதிப்பு குறைவாக இருப்பதாக உணா்கிறேன். எனவே, அனைவரும் அரசு கூறியுள்ளபடி கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டா் தவணைகளை செலுத்திக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

இம்மாதத் தொடக்கத்தில் முன்னாள் அதிபா் பராக் ஒபாமாவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நாமக்கல் செயலரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT