உலகம்

உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளோம்: போரிஸ் ஜான்சன்

DIN

ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

போர் தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், ரஷியாவால் நடத்தப்படும் போர் உக்ரைனுக்கு எதிரானது மட்டுமல்ல, சுதந்திரத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து உக்ரைன் அதிபரின் காணொலியை வெளியுறவித் துறை வெளியிட்டது.

இந்நிலையில், இதுவரை ரஷியாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சுமார் ரூ.208 (25மில்லியன் யூரோ) கோடி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT