உலகம்

உக்ரைன் தலைநகரில் 35 மணிநேர ஊரடங்கு அறிவிப்பு

DIN

பதற்றமான போர் சூழலின் மத்தியில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருமாத காலமாக உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷியா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. 

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் 35 மணி நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். 

இந்த ஊரடங்கின்போது கடைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து இயங்காது என்றும் அவர் கூறினார்.

இவற்றுக்கு மத்தியில் போலந்து சென்றுள்ள வார்சாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT