உலகம்

இலங்கையில் மருந்து பற்றாக்குறை: பேராதனை மருத்துவமனையில் அறுவைசிகிச்சைகள் ரத்து

DIN


இலங்கையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால், மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, பேராதனை மருத்துவமனையில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவசர மற்றும் உயிர் காக்கும் மருத்துவ அறுசை சிகிச்சைகளுக்காக முக்கியமான மருத்துவப் பொருள்களை பாதுகாக்கும் நோக்கில், மார்ச் 28ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பொருள்களை விநியோகிக்கும் அமைப்பிடம், உரிய மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளை வழங்குமாறு கோரியுள்ளோம், அனைத்தும் வந்ததும், உடனடியாக அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இன்றே மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் மருத்துவமனைக்குக் கிடைக்கப்பெற்றால், உடனடியாக அறுவை சிகிச்சைகள் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஏற்கனவே அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டு, மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், தற்போது மருந்து தட்டுப்பாடு மருத்துவமனை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அந்நாட்டு மக்களை அச்சமடையச் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT