உலகம்

மரியுபோல் நகரில் தொடர் பதற்றம்: மக்களை மீட்க 45 பேருந்துகள்

DIN

தென்கிழக்கு உக்ரைனின் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க உக்ரைன் அரசு 45 பேருந்துகளை அனுப்பிவைத்துள்ளது. இன்று இரவு பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள் அனைவரும் மீட்கப்படுவர் என்றும் உக்ரைன் துணைப் பிரதமர் இர்யானா வெரிஸ்சக் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய படையினா் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனா். தலைநகரான கீவ், கார்கீவ் நகரங்களை முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து முக்கியமாக, மரியுபோல் நகரம் மீது தாக்குதல் தீவிரமாகியுள்ளது. அந்த நகரில் சுமாா் 1,300 போ் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படையினா் கடந்த 16-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்தனர். 

ரஷியப் படைகள் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை குழந்தைகள், பெண்கள் என 5000 பேர் உயிரிழந்துள்ளதாக மரியுபோல் செய்தித் தொடர்பாளர் பொய்சென்கொ தெரிவித்துள்ளார். 

 நாடு முழுவதும் இதுவரை 230 பள்ளிகளும், 155 குழந்தைகள் நல மையங்களும் ரஷியத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சர்வதேச குழுவிடம் முறையிட்டதைத் தொடர்ந்து ரஷியப் படை இன்று பாதுகாப்பு வளையத்தை தளர்த்தியுள்ளது. இதனால் இன்று இரவு பேருந்துகள் மூலம் மரியுபோல் நகரில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT