உலகம்

கருக்கலைப்பு: பயண செலவுக்கு மட்டும் ரூ.3.4 லட்சம் வழங்கும் அமேசான்

DIN


அமெரிக்காவில் கருக்கலைப்பு உள்ளிட்ட மருத்துவ பயண செலவுகளுக்காக தங்களது ஊழியர்களுக்கு தலா ரூ.3.4 லட்சத்தை ஆண்டுதோறும் அமேசான் நிறுவனம் வழங்குகிறது. 

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமேசான் நிறுவனத்தின் இந்த காப்பீடு திட்டத்தில் பயண செலவுக்கு மட்டும்  இத்தகைய அதிகமான வழங்கப்படுவது  விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், இணையம் மூலம் பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் பல நாடுகளில் கிளைகளை நிறுவியுள்ளதால், பலதரப்பட்ட மக்கள் இதில் பணிபுரிந்து வருகின்றனர். எனினும், அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஆண்டுதோறும் தனி நபருக்கு பயண செலவுக்கு மட்டும் ரூ.3.4 லட்சம் வழங்கப்படுகிறது. இது அமெரிக்க ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் ஊழியர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று தேவையான உரிய சிகிச்சையைப் பெற முடியும். 

ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்து 100 மைல்களுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என்றும் அமேசான் நிபந்தனை விதித்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற இந்த திட்டம் உதவிகரமாக இருந்தாலும், அமெரிக்க ஊழியர்கள் பயணம் மேற்கொண்டு கருக்கலைப்பு செய்யவும் இந்த காப்பீடு திட்டம் பயன்படுத்தப்படுகிறது. 

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT