நேபாள விமான நிலையத்துக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப்படம்) 
உலகம்

நேபாள விமான நிலையத்துக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாளம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின.

ANI

காத்மாண்டு: வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேபாளம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கின.

நேபாளத்தில் உள்ள திரிபுவனம் சர்வதேச விமான நிலையத்துக்கு, இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த தொலைபேசி அழைப்பு, பாகிஸ்தானிலிருந்து வந்ததும், அது வெறும் புரளி என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.

நேபாள விமான நிலைய அதிகாரிகளுக்கு இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பில், விமான நிலையத்தின் உள்ளூர் விமானங்கள் தரையிறங்கும் பகுதியில் மர்ம பொருள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல்விடுக்கப்பட்டது.

உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினருக்கு எச்சரிக்கைத் தகவல் கொடுக்கப்பட்டு மர்ம பொருளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. அழைப்பு விடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT