உலகம்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரியா தகவல்

DIN

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

கடந்த மாதத் தொடக்கத்தில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வடகொரியா நேற்று மீண்டும் ஜப்பான் கடல்பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இந்த பாலிஸ்டிக் ஏவுகணை அதிவேகமாக செல்லக்கூடியது எனவும் ஜப்பான் கடல் பகுதியில் இதன் சோதனை நடந்ததாக  அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று சோதனை நடத்திய ஏவுகணை சக்திவாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

5 வருடங்களுக்கு முன்னதாக வடகொரியா சுமார் 6,000 கிமீ தூரத்துக்கு செல்லக்கூடிய சோதனை நடத்திய ஏவுகணையே இதுவரையில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை: பயிா்கள், மின்கம்பங்கள் சேதம்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் தலைமை தோ்தல் அலுவலா் சத்யபிரத சாகு ஆய்வு

மே 20-இல் வரதராஜபெருமாள் கோயில் வைகாசித் திருவிழா

SCROLL FOR NEXT