உலகம்

ஆப்கனில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தடை

DIN

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

தலிபான்கள் ஆட்சி அமைத்த பிறகு மீண்டும் மனித உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. சில நாள்களுக்கு முன், 6ஆம் வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதித்தனர். இந்த சம்பவத்திற்கு உலகளவில் பல்வேறு நாடுகள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தலிபான்கள் தடை விதித்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் உணவு பாதுகாப்பின்மையில் உலகளவில் முதல் இடத்திற்கு ஆப்கானிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. 2.3 கோடி மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும், மொத்த மக்கள் தொகையில் 95 சதவீதம் பேர் சரியான உணவு கிடைக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT