முகப்பு
உலகம்

இலங்கையில் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்; அனைத்துப் பணிகளும் முடங்கின

இலங்கை அதிபரை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

இலங்கை அதிபரை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

மே தினத்தன்று சாலைப் பேரணியில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் உள்ள வணிக சங்கங்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. 

மேலும் ரயில்வே, போக்குவரத்துத் துறை, வங்கிகள், சுகாதாரத்துறை, மின்சாரத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியும் 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்  இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →