உலகம்

இலங்கையில் ஊரடங்கு அமல்; கொழும்பில் ராணுவம் குவிப்பு

DIN

கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அரசின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டம் காரணமாக, இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக, கொழும்பில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 78 பேர் காயமடைந்தனர்.

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சவை விலகுமாறு, அதிபர் கோத்தபய ராஜபட்ச வலியுறுத்திய நிலையில், பிரதமரின் ஆதரவாளர்களால், அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது இந்த வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டிருப்பதகாவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT