உலகம்

ஒடேசா மீது தீவிர குண்டுவீச்சு

DIN

உக்ரைனின் மேலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரம் மீது ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஒடேசா நகரில் ரஷியா தனது தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை இரவு மட்டும் அந்த நகா் மீது ரஷியப் படையினா் 7 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில், வணிக வளாகம் ஒன்றும், சேமிப்புக் கிடங்கு ஒன்றும் பலத்த சேதமடைந்தது.

இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.

சோவியத் காலத்திய ஏவுகணைகளை ரஷியா பயன்படுத்துகிறது. அதனால், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்காமல் பொதுமக்கள் வசிப்பிடங்களில் அந்த ஏவுகணைகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஒலியைப் போல் 5 மடங்கு வேகம் கொண்ட அதிநவீன ஏவுகணைகளை தாக்குதலுக்கு ரஷியா பயன்படுத்துவதாக உக்ரைன் நிபுணா் ஒருவா் கூறினாா்.

ஏற்கெனவே துறைமுக நகரான மரியுபோலை ரஷியா கைப்பற்றியுள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு துறைமுக நகரான ஒடேசாவில் ரஷியா நடத்தி வரும் தாக்குதலால் உணவுப் பொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT