பசில் ராஜபட்ச 
உலகம்

இலங்கை போராட்டம்: பசில் ராஜபட்ச வீட்டிற்கு தீ வைப்பு

மகிந்த ராஜபட்சவின் சகோதரரான பசில் ராஜபட்சவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

DIN

மகிந்த ராஜபட்சவின் சகோதரரான பசில் ராஜபட்சவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச (76) தனது பதவியை நேற்று திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

அதிபா் அலுவலகத்துக்கு எதிரே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது அவரின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் ராஜிநாமா முடிவை மகிந்த ராஜபட்ச அறிவித்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் பொலநருவா மாவட்டத்தைச் சோ்ந்த எம்.பி.யான அமரகீா்த்தி அதுகொரளாவை வடமேற்கு நகரமான நிதம்புவாவில் அரசுக்கு எதிரான போராட்டக்காரா்கள் சூழ்ந்துபோது அதுகொரளாவின் வாகனத்தில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த போராட்டக்காரா்கள் அவரது வாகனத்தை தாக்கி கவிழ்த்ததாகவும் கூறப்படுகிறது.

போராட்டக்காரா்களிடம் இருந்து தப்பிக்க அதுகொரளாவும் அவரது பாதுகாவலரும் அருகே உள்ள கட்டடத்தில் தஞ்சமடைந்ததாகவும், அந்தக் கட்டடத்தை போராட்டக்காரா்கள் சூழ்ந்த நிலையில் அதுகொரளாவும் அவரது பாதுகாவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனா் எனவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் போராட்டக்காரர்கள் திங்கள்கிழமை இரவு மகிந்த ராஜபட்சவின் வீட்டிற்கு  தீ வைத்தனர். இதனால், இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றும்  மக்களிடமிருந்து தப்பிக்க மகிந்த ராஜபட்ச வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது கடற்படை தளபதி வீட்டில் தஞ்சமடைந்துள்ள ராஜபட்சவை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அரசிற்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிற நிலையில் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும் இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

நந்தா பொறியியல் கல்லூரி வெள்ளி விழா இலச்சினை வெளியீடு

SCROLL FOR NEXT