முகப்பு
உலகம்

உக்ரைனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டுபிடித்துள்ளதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Updated On : 10 மே, 2022 at 1:48 PM
பகிர்:

உக்ரைனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டுபிடித்துள்ளதாக உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுகுறித்து கார்கிவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைவரான ஒலே சினேஹுபோவ் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 

கடந்த இரண்டு மாதங்களாக ரஷிய படைகள் உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வருகின்றன. 

Advertisement

கடந்த மார்ச் மாதம் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஐசியம் கார்கிவ் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. 

இந்த கட்டடம் இடிந்து விழும்போது பொதுமக்கள் உள்ளே இருந்ததாக அவர் கூறியுள்ளார். 

இது, உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய மற்றொரு பயங்கரமான தாக்குதலாகும். ஐசியம் கிழக்கு உக்ரைனிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.