உலகம்

கோடீஸ்வரியானது எப்படி? உலகமகா கருமியின் டிப்ஸ்

DIN

நான் இந்த உலகின் மிகக் கருமியான கோடீஸ்வரி என்று முகம் மலர புன்னகையோடு கூறிக் கொள்ளும் எய்மீ எலிசபெத், பிறந்தது முதலே கோடீஸ்வரி அல்ல.

தான் ஏழையாக இருந்து, தொழிலதிபராகி, இன்று கோடீஸ்வரி என்ற மன்னிக்கவும் கோடீஸ்வர கருமி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

32 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் எய்மீ எலிசபெத், தனது கருமித்தனம் குறித்தும், எவ்வாறு கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது குறித்தும் புத்தகம் எழுதியுள்ளார். தன்னைப் போல பிறரும் சிக்கனமாக இருந்து கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சரி அவர் கடைப்பிடிக்கும் சிக்கனம் குறித்து அவரே கூறுகிறார்.. 

நான் தேவையில்லாமல் எதையுமே வாங்க மாட்டேன். தேவைப்படும் பொருள்களையும் கூட, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் இரண்டாம்தர பொருள்களையே வாங்குவேன்.

என் வீட்டின் சமையலறையில் கூட ஒரே ஒரு கத்திதான் உள்ளது. துடைக்க ஒரு பஞ்சுதான் வைத்திருக்கிறேன்.

நான் எனது கழிப்பறையிலிருக்கும் வாட்டர் ஹீட்டரை 22 நிமிம் மட்டுமே இயக்குவேன். அதிலிருந்து வரும் தண்ணீர் குளிப்பதற்கு போதுமானதாக இருக்கும். அதற்குள் குளித்து முடித்துவிடுவேன். இதற்காக டைமர் செட் செய்திருக்கிறேன். 

ஒரு வேளை, ஒரு சில விநாடிகள் எனது வாட்டர் ஹீட்டர் இயக்கப்பட்டாலும் கடவுள் என்னை மன்னிக்க மாட்டார் என்றே நினைப்பேன். இதனால், என் மின் கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும் என்கிறார்.

எல்லாவற்றையுமே புதிதாக வாங்க வேண்டும் என்று நான் விரும்புவதில்லை. 

என் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு கத்தியை பத்திரமாக பாதுகாப்பேன். ஒரு சொட்டு தண்ணீர் பட விடமாட்டேன். உபயோகித்ததும் அதனை துணியால் நன்கு துடைத்து வைத்துவிடுவேன். அப்போதுதான் அது நீண்ட நாள்களுக்கு இருக்கும்.

நான் இவ்வளவு பெரிய வீட்டில் வசிப்பதற்கு என் முன்னாள் கணவர்தான் காரணம். நான் இதை விட சிறிய வீட்டுக்குச் சென்றுவிடுவேன் என்று தெரிந்து, விவகாரத்துக்கு முன்பே, அவர் தனது வீட்டை எனக்குக் கொடுத்து. இதே வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார் என்கிறார் சில்லறையை உண்டியலில் போடும்போது வரும் சப்தத்தைப் போல.

எனக்கு நல்ல விஷயங்கள் எல்லாமே பிடிக்கும். ஆனால் அதற்கு செலவிட மட்டும் பிடிப்பதில்லை என்று தனது மிக முக்கிய கொள்கையை வெளிப்படுத்தினார்.

உண்மையிலேயே இது ஒன்றுதான் அவர் கோடீஸ்வரியாக மாறியதற்கு மிக முக்கிய காரணம். அவருக்கு செலவிட பிடிப்பதில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT