உலகம்

'இலங்கையின் நிலை இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி' - மெஹபூபா முஃப்தி

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

DIN

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்ததுடன் பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபட்சவும் பிரதமர் மகிந்த ராஜபட்சவும் பதவி விலகக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச திடீரென திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், பிரதமர் மகிந்தவின் இல்லத்திற்கு தீ வைத்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது. இலங்கையில் ஏற்பட்ட இந்த வன்முறையில் 9 பேர் பலியாகியுள்ளனர்; 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், இலங்கையின் நிலை குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கருத்துத் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் என்ன நடந்தது என்பது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது. இது மிகை தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது. அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் செலவில். 

'இலங்கையின் தற்போதைய நிலை இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை மணி.  2014 முதல் இந்தியாவில் வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சம் அதிகரித்துள்ளது. இலங்கையைப் போலவே, தீவிர தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாத பாதையில் செல்கிறது. இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்' என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி கிணற்றில் மாணவா் சடலமாக மீட்பு!

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

ஆற்காட்டில் 6 பசுமாடுகள திருடி சென்ற நபா் கைது

SCROLL FOR NEXT