உலகம்

'இலங்கை மக்கள் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது' - அதிபர் கோத்தபய ராஜபட்ச

DIN

பொருளாதார, சமூக, அரசியல் சவால்களை வெற்றிகொள்ள, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது என அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனால் வன்முறை ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மக்கள், பிரதமரின் இல்லத்திற்கு தீ வைத்தனர். மக்கள் மீது ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினர் மீது மக்களும் மாறிமாறித் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இதையடுத்து, மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பொருளாதார, சமூக, அரசியல் சவால்களை வெற்றிகொள்ள, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது. 
இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை இலங்கை மக்கள் நிராகரிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சக மக்களின் வாழ்வை ஊக்குவிப்பது இன்றியமையாதது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT