உலகம்

இலங்கையில் நாளை(மே 13) வரை ஊரடங்கு நீட்டிப்பு: இன்று 7 மணிநேரம் தளர்வு

DIN

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதற்கிடையே, தலைநகா் கொழும்பில் பிரதமரின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்கள் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் திடீா் தாக்குதலில் ஈடுபட்டனா். 

இதனைத் தொடர்ந்து, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அரசியல் தலைவர்களின் வீடுகள், பேருந்துகள் உள்ளிட்டவை போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை வரை அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக அதிபர் மாளிகையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT