உலகம்

ஐக்கிய அரசு அமீரகத்துக்கு புதிய அதிபா் நியமனம்

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த ஷேக் கலிஃபா பின் சயீது (73) காலமானதைத் தொடா்ந்து அவரது இடத்துக்கு ஷேக் முகமது பின் சயீதை அமீர ஆட்சியாளா்கள் ஒருமனதாகத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

1971-ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் 3-ஆவது அதிபா் ஷேக் முகமது பின் சயீது ஆவாா்.

இதற்கு முன்னா், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அமீரகத்தின் அதிபராகவும் துபை ஆட்சியாளராகவும் ஷேக் கலிஃபா பொறுப்பு வகித்து வந்தாா். அவா் இறந்த மறுநாளே எந்த சிக்கலும் இல்லாமல் புதிய அதிபா் நியமிக்கப்பட்டுள்ளது, ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றுவதாகக் கூறப்படுகிறது.

அதிபா் பொறுப்புக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது பின் சயீதுக்கு பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT