உலகம்

கரோனா கட்டுப்பாடு நடவடிக்கை: சரிந்து வரும் சீன பொருளாதாரம்

DIN


சீனாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டின் பல பகுதிகளில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நுகர்வு மற்றும் தொழில்துறை உற்பத்தி மிகவும் குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

சீனாவின் தலைநகா் பெய்ஜிங்கில் அண்மைக் காலமாக தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொழில்துறை உற்பத்தி மிகவும் குறைந்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் ஏப்ரல் மாதத்தில் சீனாவின் பொருளாதாரம் கடுமைாயாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

கோடிக் கணக்கான சீன மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் சில்லறை வர்த்தகம் முந்தைய ஆண்டை விட 11.1 சதவிகிதம் குறைந்துள்ளது, இது மார்ச் மாதத்தின் 3.5 சதவிகிதத்தை விட மோசமாக உள்ளது என்று சீன தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவு தெரிவித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை மார்ச் 2020 -க்குப் பிந்தைய மிகப்பெரிய சரிவைக் குறிக்கிறது. 

பொதுமுடக்கம் தொழிற்சாலைகள் செயல்பாடுகளை முடக்கியதுடன் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்ததால், தொழில்துறை உற்பத்தி ஆண்டிற்கு முந்தைய சதவிகிதத்தை விட 2.9 சதவிதம் சரிந்தது, மார்ச் மாதத்தில் 5 சதவிகித லாபத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி 2020 க்குப் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. 

கரோனா கட்டுப்பாடு காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு அதிகரித்துள்ளதாகவும், வேலையிழந்தோரின் சதவிகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.8 சதவிதத்தில் இருந்து 6.1 சதவிகிதமாக அதிகரிதது, பிப்ரவரி 2020க்குப் பிறகு முதல்முறையாக இந்த அளவிற்கு உயர்வு காணப்படுவதாகவும் சீன தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவு தெரிவித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டில் பெய்ஜிங் தனது வளர்ச்சி இலக்கான 5.5 சதவிகிதத்தை அடையுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT