முகப்பு
உலகம்

இனவெறி: கருப்பின மாணவன் உடைமைகள் மீது சிறுநீர் கழித்த வெள்ளையின மாணவன்

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பகுதியில் உள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் கருப்பின மாணவனின் உடைமைகள் மீது வெள்ளையின மாணவன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:17 AM
பகிர்:

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பகுதியில் உள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் கருப்பின மாணவனின் உடைமைகள் மீது வெள்ளையினத்தைச் சேர்ந்த மாணவன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கருப்பின மாணவனின் அறைக்குச் சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த வெள்ளையின மாணவன் அந்த மாணவனின் உடமைகளின் மீது சிறுநீர் கழித்துள்ளான். கருப்பின மாணவர்களை வெள்ளையின மாணவர்கள் இப்படிதான் நடத்துவார்கள் என அந்த மாணவன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் தொலைபேசியில் விடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியானது. இதனையடுத்து, அந்த வெள்ளையின மாணவன் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டான்.

இந்த இனவெறி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

2021 ஆம் கல்வியாண்டில் இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் 54.4 சதவிகிதம் வெள்ளையின மாணவர்கள் மற்றும் 22.5 சதவிகிதம் கருப்பின மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.