உலகம்

ஐ.நா உதவிக்குழுவின் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும்: தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

DIN

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த பின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் பணிக்குச் செல்லக்கூடாது என்றும் அவர்கள் உயர்கல்வியைத் தொடர்க்கூடாது எனவும் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

முன்னதாக, ஆப்கனில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது, ஆப்கனில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் “எந்தப் பெண் ஊழியராவது ஹிஜாப் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கட்டாயம் இதை அணிய வேண்டும் என  ‘கண்ணியமான’ முறையில் எடுத்துச் சொல்லப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறவிருக்கிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!

நூறு கோடி வானவில்... மாளவிகா மனோஜ்!

இதுவரை இல்லாத பேட்டரி திறன்... விவோ ஒய் 500 சிறப்புகள் என்ன?

மலையாளக் கவிதை... அனுமோள்!

SCROLL FOR NEXT