உலகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 109.45 அடியாக உயர்வு

DIN

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,546 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 15 ஆம் தேதி காலை 108.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 109.45 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.31 அடி உயர்ந்துள்ளது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் குறித்த காலத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் உயர்வதால் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மீன் வளம் பெருகும் என்று மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.45 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9546 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 77.63 டி.எம்.சி. ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT