இலங்கை வன்முறை: ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை
இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிராக போராடியவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை குறித்து மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மகிந்த ராஜபட்ச ஆதரவாளர்கள் மற்றும் அரசுக்கு எதிராக போராடியவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை குறித்து மேலும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை இலங்கை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி நிகல் தல்துவா கூறியதாவது, “ மூன்று முன்னாள் அமைச்சர்கள் சிபிஐ அதிகாரிகளால் இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக அவர்களது சக நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை வருகிற மே 25ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் சம்பந்தப்பட்ட 1059 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அமைதியாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டியதற்காக அரசியல்வாதிகள் சிலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.
இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடந்த மே 9ஆம் தேதி எதிர்த்து தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.