உலகம்

எனக்கு ஏன் இத்தனை குழந்தைகள்? கவனம் ஈர்த்த எலான் மஸ்கின் சமீபத்திய ட்விட்

DIN

டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் பதிவிட்ட அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் தொடர்பான ட்விட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார் என்பது குறித்த தரவு ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் என்பது 2.1-க்கு குறைவாகவே உள்ளது. இது தொடர்பாக எலான் மஸ்க் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வரைபடத்தில் அமெரிக்காவின் கருவுறுதல் விகிதம் ஏற்கெனவே 1.5-ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை எலான் மஸ்கால் பதிவிடப்பட்ட இந்த ட்விட் இதுவரை 1.2 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் பெற்றுள்ளது. எலான்  மஸ்கின் இந்த பதிவிற்கு ட்விட்டர் பயனாளர் ஒருவர், “நேர்மையாக கூற வேண்டுமென்றால் நிறைய குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம்” என பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எலான்  மஸ்க், “பிறகு ஏன் பணக்காரர்கள் கூட குறைவான குழந்தைகளையே கொண்டுள்ளனர்” என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, “பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு குழந்தைகள் குறைவாக இருக்கும் என பலர் கூறுவார்கள். ஆனால், நான் அதற்கு விதி விலக்கானவன்” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கிற்கு 7 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT