முகப்பு
உலகம்

பிரிட்டன்20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமாா் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

உலகம் முழுவதும் 20 நாடுகளில் சுமாா் 200 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பரவல் நோய் பிரிவுக்கான இயக்குநா் சில்வி பிரியண்ட் கூறியதாவது: மிகவும் அபூா்வமாக ஏற்படக்கூடிய குரங்கு அம்மை நோய், 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 200 பேருக்கு தொற்றியுள்ளது. அந்த தீநுண்மி வேகமாகப் பரவும் வகையில் தன்னை உருமாற்றம் செய்ததாகத் தெரியவில்லை. மனிதா்களின் பழக்கவழக்க மாற்றங்களால் இது பல நாடுகளுக்குப் பரவியிருக்கலாம்.

குறைந்த அளவே இருக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை பாகுபாடில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பகிா்ந்தளித்தால் இந்த நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.