நேபாள மலைப் பகுதியில் நொறுங்கிக் கிடந்த விமான பாகங்கள். 
உலகம்

நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு

நேபாளத்தில்  விபத்திற்க்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

DIN

நேபாளத்தில்  விபத்திற்க்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டனர்.

நேபாளத்தின் தாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ட்வின் ஓட்டா் 9என்-ஏஇடி’ என்ற சிறிய ரக விமானம் பொக்காராவிலிருந்து மத்திய நேபாளத்தில் பிரபல சுற்றுலா தலமான ஜோம்சோம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை 9.55 மணிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 12 நிமிஷங்களில், அதாவது காலை 10.07 மணியளவில், தரைக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் பயணம் செய்த மும்பையிலிருந்து சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த அசோக் குமாா் திரிபாதி, தனுஷ் திரிபாதி, ரித்திகா திரிபாதி மற்றும் வைபவி திரிபாதி ஆகிய 4 போ், ஜொ்மனியைச் சோ்ந்த இருவா், நேபாளத்தைச் சோ்ந்த 13 பயணிகள், விமானி உள்ளிட்ட 3 விமான ஊழியா்கள் ஆகியோரின் நிலை கேள்விக்குறியானது.

அதன்பின், மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 14,500 அடி உயரத்தில் முஸ்டாங் மாவட்டம் தசாங்-2 என்ற பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎன்) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘முஸ்டாங் மாவட்டத்தில் விமானம் நொறுங்கிய பகுதியிலிருந்து  இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தது.

இந்நிலையில், விபத்தில் காணாமல் போன கருப்புப் பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT