உலகம்

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா

DIN

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை பரிசோதனை செய்த வடகொரியாவால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக  தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து அந்நாடு மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. ஒரே நாளில் 23 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் வடகொரியாவின் ஏவுகணைகள் தென்கொரிய கடற்பகுதியில் விழுந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்து தரப்பினரும் பதற்றங்களை மேலும் அதிகரிக்கக்கூடிய எந்தவிதமான  நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும் ரஷியா வலியுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT