உலகம்

தொடர் ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

DIN

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்கா- தென் கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது. 

புதன்கிழமை தொடர்ச்சியாக 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்தது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தென்கொரியா மற்றும் ஜப்பானின் வடக்குப் பகுதியில் ஏவுகணை பறந்ததாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன. 

ஒன்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் சோதிக்கப்பட்ட நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. எனினும் இவ்வகை ஏவுகணை சோதனை வெற்றி பெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்ந்து நடைபெற்றும் வரும் அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT