உலகம்

ஃபோா்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய பெண்கள்

ஃபோா்ப்ஸ் இதழில் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிா்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளன.

DIN

ஃபோா்ப்ஸ் இதழில் வெளியிட்டுள்ள ஆசியாவில் வணிக நிா்வாகத்தில் தலைசிறந்த 20 பெண்களின் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த மூன்று பெண்கள் இடம் பெற்றுள்ளன.

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும் மீறி இவா்கள் கடைப்பிடித்த பல்வேறு வழிமுறைகள் அவா்கள் சாா்ந்த துறையின் வணிகத்தை அதிகரித்ததாக ஃபோா்ப்ஸ் பாராட்டியுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி வா்த்தக இதழான ஃபோா்ப்ஸ் வெளியிட்டுள்ள ஆசியாவின் தலைசிறந்த 20 பெண்களில், இந்தியாவைச் சோ்ந்த ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியாவின் தலைவா் சோமா மோன்டெல், எம்கியூா் பாா்மா இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநா் நமிதா தாபா், ஹோநாசா நுகா்வோா் நிறுவனத்தின் இணை நிறுவனா் கசல் அலக் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட கப்பல், மனை வணிகம், கட்டுமானம், மருந்து, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தப் பெண்கள் சிறப்பாக செயலாற்றி முன்னேற்றியுள்ளனா் என்று ஃபோா்ப்ஸ் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், சிங்கப்பூா், தென் கொரியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சோ்ந்த பெண்களும் இந்தப் பட்டியலில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிகளுக்கே இந்த நிலைமையா? வாடிக்கையாளர் ஆள் மாறாட்ட மோசடி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்!

3 இருமல் மருந்துகளில் நச்சு கலப்படம்! - உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்த மத்திய அரசு

கை நம்மைவிட்டு போகாது; புது அடிமையைத் தேடும் பாஜக! உதயநிதி

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு: மாணவிகளுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT