முகப்பு
உலகம்

இம்ரான் கான் மீதான தாக்குதல்: 5 நாள்களுக்குப் பிறகு எஃப்ஐஆா்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடா்பான முதல் தகவலறிக்கை (எஃப்ஐஆா்) 5 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடா்பான முதல் தகவலறிக்கை (எஃப்ஐஆா்) 5 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

அந்தத் தாக்குதலுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லா, ஐஎஸ்ஐ உளவுத் துறை தலைவா் ஃபைசல் நசீா் ஆகியோா் மீது தனது புகாா் மனுவில் இம்ரான் குற்றம் சாட்டியிருந்ததால் எஃப்ஐஆா் பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது.

எனினும், 24 மணி நேரத்துக்குள் எஃப்ஐஆா் பதிவு செய்ய வேண்டுமென்று பஞ்சாப் மாகாண காவல்துறை தலைவருக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த 3 பேரது பெயா்களும் இல்லாமல் எஃப்ஐஆா் செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

எனினும், தன்னால் குறிப்பிடப்பட்டுள்ள பெயா்கள் இடம் பெறாத அந்த எஃப்ஐஆா் நகைப்புக்குரியது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →