உலகம்

‘உக்ரைன் போரில் ஒரு லட்சம் ரஷிய வீரர்கள் பலி’

உக்ரைனுடனான போரில் ஒரு லட்சம் ரஷிய வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

DIN

உக்ரைனுடனான போரில் ஒரு லட்சம் ரஷிய வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரி மார்க் மில்லி தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக, உக்ரைனின் கிழக்கே ரஷியாவையொட்டி அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களையும் தெற்கே அமைந்துள்ள ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய பிராந்தியங்களையும் ரஷியா கைப்பற்றியது.

தொடர்ந்து, நட்பு நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் கடந்த 9 மாதங்களாக ரஷியாவுக்கு பதில் தாக்குதல் அளித்து வருகின்றது.

இந்த போர் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி மார்க் மில்லி செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:

உக்ரைனுடனான போரில் ரஷியாவை சேர்ந்த ஒரு லட்சம் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம். உக்ரைன் வீரர்களுக்கும் இதே நிலைதான்.

உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் ராணுவத் தாக்குதலுக்கு எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பதிலளித்தாக வேண்டும். போர் தொடங்கியது முதல் 1.5 கோடி முதல் 3 கோடி மக்கள் வரை அகதிகளாகியுள்ளனர். 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை முடிவுக்கு வராவிட்டால், உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும்.” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, உக்ரைன் பாதுகாப்புத் துறை நேற்று வெளியிட்ட செய்தியில், ரஷியாவின் 77,950 வீரர்கள் பலியாகியுள்ளனர். அவர்களின் 2,801 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT