உலகம்

டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அறிவுரை

தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

DIN

தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் நீருக்கடியில் 24.8 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்ற போதிலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரியில் டோங்கா தீவில் நீருக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT